POWER ELECTRONICS AND POWER
ENGINEERING திறன்மின்னணுவியல் மற்றும்
மின்திறனியல்
ANODE - நேர்
மின்வாய்
ARC LAMP - மின்வில்
விளக்கு
ARMATURE - மின்னகம்
BALANCE WHEEL - சமச்சக்கரம்
BALANCE POINT - சமநிலை
BALL BEARING - மணித்தாங்கி, மணிப்பொதிகை
BAND GAP - பட்டை இடைவெளி, பட்டையிடுக்கு
BAR MAGNET - சட்டக் காந்தம்
BOOST REGULATOR - ஊக்கு மாற்றி
BRUSH - மின்தொடி
BUCK REGULATOR - இறக்கு/படியிறக்கு ட்மாற்றி
BUCK BOOST REGULATOR - இறக்கு ஊக்கு மாற்றி
BUNCHED CONDUCTOR - கொத்துக்கடத்தி
BUS BAR - கடத்திச் சட்டம் - அதிக
மின்னோட்டத்தைத் தாங்கும் மின்கடத்தி; மின்பங்கீட்டமைப்பின்
(power distribution system) முக்கியமான உறுப்பாகும்
CAPACITOR MOTOR - தேக்க மின்னோடி, கொண்ம மின்னோடி
CERAMIC CAPACITOR - வெண்களிமண் மின்தேக்கி
CHARGE PUMP - மின்னூட்ட இறைப்பி
CIRCUIT BREAKER - (சுற்றமைப்புப்) பிரிகலன்
CLAMPING - பற்றிடல்
CLAMPING CIRCUIT - பற்று மின்சுற்று
CLIPPING CIRCUIT - வெட்டு மின்சுற்று
COMMUTATION (BRUSH) - திரட்டல்
COMMUTATION (TURNING OFF) - மின்துண்டிப்பு
COMMUTATOR (BRUSH) - திரட்டி
COMMUTATOR (TURNING OFF) - மின்துண்டிப்பி
COMMUTATOR MOTOR - திரட்டி மின்னோடி
CONTINUOUS MODE - தொடர்ந்தப் பாங்கு - ஒரு
நிலைமாறு சீர்ப்பியில் மின்தூண்டி மின்னோட்டம் சுழிய மதிப்பு அடையாமல் இயங்குதல்
CURRENT SENSING - மின்னோட்ட உணர்வு
CURRENT SENSE RESISTOR - மின்னோட்ட உணர்
மின்தடையம்
DIRECT DRIVE - நேரோட்டு
DC MOTOR - ஒருதிசை மின்னோட்ட மின்னோடி
DC-DC CONVERTER - ஒருதிசை-ஒருதிசை மாற்றி
DIELECTRIC - மின்கடத்தாப் பொருள், மின்கடத்திலி
DIELECTRIC CONSTANT - மின்கடவா எண்
DIELECTRIC LOSS - மின்காப்பிழப்பு
DIELECTRIC RESISTANCE - மின்காப்புத் தடை
DISCHARGE CURRENT - மின்னிறக்க மின்னோட்டம்
DIFFRACTION (WAVE) - விளிம்பு வளைவு
DIFFUSION, DIFFUSION CURRENT - விரவல், விரவலோட்டம்
DIPOLE MOMENT - இருமுனைத் திருப்பம்
DISCONTINUOUS MODE - தொடரற்றப் பாங்கு - ஒரு
நிலைமாறு சீர்ப்பியில் மின்தூண்டி மின்னோட்டம் சுழிய மதிப்பு அடைந்து இயங்குதல்
DRIP PROOF MOTOR - கசிவுக்காப்பு மின்னோடி
DRIVE (AMPLIFIER) - ஓட்டி (மிகைப்பி)
ELECTROLYTIC CAPACITOR - மின்னாற்பகு
மின்தேக்கி
EQUIVALENT SERIES INDUCTANCE (ESR) - சமவலு
தொடர்மின்தூண்டம்
EQUIVALENT SERIES RESISTANCE (ESR) - சமவலு
தொடர்மின்தடுப்பு
FIELD WINDING - புலச் சுருணை - ஒரு
மின்னோடியில் ஒன்றுவிட்டதாக வடக்கு தெற்கு முனைகளை ஏற்படுத்தும் சுருணை
FORCED COMMUTATION - வலுக்கட்டாய மின்துண்டிப்பு
FORWARD BIAS - முன்னோக்குச் சாரிகை
FORWARD RECOVERY TIME - முன்னோக்கு மின்மீட்டு
நேரம்
GROUND RETURN - நிலத் திரும்பம்
HYSTERISIS - தயக்கம் - கீழிலிருந்து மேல் மற்றும் மேலிருந்து
கீழ் மாறும் போது கருவுணர் வேறுபடுதல்
INDUCTION MOTOR - தூண்டல் மின்னோடி
INERTIA - நிலைமம்
INVERSION - நேர்மாறல்
INTERACTION - உள்வினை
INSTRINSIC SEMICONDUCTOR - உள்ளார்ந்தக்
குறைக்கடத்தி
ION - மின்னணு - மின்னூட்டமுடைய அணு;
எதிர் மின்னணுக்களில் எதிர்மின்னிகள் (electrons) மிகையாகவும் நேர் மின்னணுக்ளில் எதிர்மின்னிகள் குறைபாடாக அமையும்
IONIZATION - மின்னணுவாக்கம்
ION CURRENT - மின்னணுவோட்டம்
ION SHEATH - மின்னணுவுறை
IONIC CONDUCTIVITY - மின்னணுக் கடத்தம்
KINETIC ENERGY - இயக்காற்றல்
LEAKAGE CURRENT - கசிவு மின்னோட்டம்
LEPTON - மெதுனி - குறை பாரம் கொண்ட
அடிப்படைத் துகள்கள்; இவை முழுச்சுழல் (integer
spin) கொண்டவை
MALLEABILITY - தகடுமை, தகடாகும்
தன்மை
MAGNETIZATION - காந்தமை, காந்தத்தன்மை
METADYNE - மாற்றியங்கி - மூன்று அல்லது
அதற்கு மேலான மின்தொடிகள் உள்ள மின்னோடி; மிகைப்பி
அல்லது சுழல் மின்மாற்றியாகப் பயனாகிறது
NO LOAD CHARACTERISTICS - சுமையில்
சிறப்பியல்புகள்
NEGATIVE ION - எதிர் மின்னணு
OVERCURRENT - மிகுமின்னோட்டம்
OVERCURRENT PROTECTION - மிகுமின்னோட்டக்
காபந்து
OVERLOAD - மிகுசுமை
PEAK CURRENT - உச்ச மின்னோட்டம்
PEAK LOAD - உச்சச் சுமை
POTENTIOMETER - மின்னழுத்தவளவி
POWER DISTRIBUTION SYSTEM - மின்பங்கீட்டமைப்பு
POWER FACTOR - திறன் காரணி - மாறுதிசை மின்னழுத்திற்கும் மாறுதிசை மின்னோட்டத்திற்கு
இடையே உள்ள முந்தல் அல்லது பிந்தல் கோணத்தின் துணைசெவ்வளைவு (cosine)
POWER FACTOR CORRECTION - திறன் காரணி
திருத்தம் - மாறுதிசை மின்னழுத்திற்கும் மாறுதிசை மின்னோட்டத்திற்கு இடையே உள்ள
முந்தல் அல்லது பிந்தலை குறைப்பது
POWER GOOD - நற்திறன் - ஒரு மின்வழங்கி
அளிக்கும் மின்னழுத்தம் நிலைநிலை அடைந்துள்ளதா என்பதைக் காட்டும் குறிகை;
வேற்றுப் பெயர் 'சரிதிறன்' (Power OK)
POWER OK - சரிதிறன் - ஒரு மின்வழங்கி
அளிக்கும் மின்னழுத்தம் நிலைநிலை அடைந்துள்ளதா என்பதைக் காட்டும் குறிகை;
வேற்றுப் பெயர் 'நற்திறன்' (Power OK)
POWER RAIL - மின் கிராதி
POWER SUPPLY - மின் வழங்கி
POWERED - திறனளிப்பு/மின்னளிப்பு நிலை
POWER DOWN - திறனகற்றம்/மின்னகற்றம்,
திறனகற்று/மின்னகற்று
POWERUP - திறன்தொடக்கம்/மின்தொடக்கம்,
திறன்தொடங்கு/மின்தொடங்கு
QUIESCENT CURRENT - அமைதிய மின்னோட்டம்
RAMP DOWN - சரிவிறக்கம்
RAMP UP - சரிவேற்றம்
RATING - செயல்வரம்பு
REVERSE BIAS - பின்னோக்குச் சாரிகை
REVERSE RECOVERY TIME - பின்னோக்கு மின்மீட்டு
நேரம்
RHEOSTAT - தடைமாற்றி
ROTATORY COMPRESSOR - சுழல் அழுத்தி
ROTORY TRANSFORMER - சுழல் மின்மாற்றி
SATURATION - தெவிட்டல்
SAW-TOOTH (WAVEFORM) - ரம்பப்பல் (அலைவடிவம்)
SILICON CONTROLLED RECTIFIER - மண்ணியத்திருத்தி
SOFT-START - மென்துவக்கம் - உட்பாய்வு
மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்த ஒரு முறைமையை மெதுவான சரிவேற்றத்துடன் (ramp-up)
தொடக்குதல்
STEADY STATE - நிலைநிலை
STEP-DOWN TRANSFORMER - படியிறக்கு மின்மாற்றி
STEP-DOWN (VOLTAGE) CONVERTER - படியிறக்கு
(மின்னழுத்த) மாற்றி - வேற்றுப்
பெயர் இறக்கு மாற்றி
STEP-UP TRANSFORMER - படியேற்று மின்மாற்றி
STEP-UP (VOLTAGE) CONVERTER - படியேற்று
(மின்னழுத்த) மாற்றி - வேற்றுப் பெயர் ஊக்கு மாற்றி
SUPPLY VOLTAGE - வழங்கல் மின்னழுத்தம்
SURGE - எழுச்சி
SYNCHRONOUS MACHINE - ஒத்தியங்கு இயந்திரம்
SYNCHRONOUS MOTOR - ஒத்தியங்கு மின்னோடி
TACHOMETER - சுற்றுமானி
TANTALLUM CAPACITOR - இஞ்சாய மின்தேக்கி
THERMAL SHUTDOWN - வெம்மை அணையல்
TURNS RATIO - சுற்றுகள் விகிதம்
THERMOSTAT - வெப்பநிலைப்பி
THYRISTOR - வாயில்தடையம் - நேரகம்-எதிரகம்-நேரகம்-எதிரகம்
(p-n-p-n) என நான்கு மண்டலங்கள் அடுக்காக
அமைக்கப்பட்டச் சாதனம்; இச்சாதனத்தில் மூன்று அல்லது நான்கு
சந்திகள் இருக்கும்; நிலைமாற்றி அல்லது மின்திருத்தியாக
செயல்படுகிறது; மண்ணியத்திருத்தி,
TRIAC (TRIODE FOR AC) - மாறுமின் மும்முனையம் -
இரண்டு பின்னிணைக்கப்பட்ட, வாயில்வாய்கள்
ஒன்றிணைக்கப்பட்ட மண்ணியத்திருத்திகள் (SCRs) அல்லது
வாயில்தடையங்களுக்கு (thyristors) செயற்கூற்றுச் சமமானச்
சாதனம்; இது ஒரு இருதிசை நிலைமாறு சாதனம்; வாயில்வாய் விசைவிக்கப்படும் போது இருதிசையிலும் கடத்தும்
TRIGGER, TRIGGERING - குதிரை, குதிரையிடல்
TRIGGER CIRCUIT -
குதிரைச் சுற்று
UNDERVOLTAGE LOCKOUT -
குறைமின்னழுத்தப்
பூட்டணையல்
VALENCE BAND -
இணைதிறன் பட்டை
VELOCITY -
திசை வேகம்