RAILWAYS
– இருப்புப்பாதை
ADHESION - ஒட்டுமை - இயக்குசக்கரங்கள் தண்டவாளத்தில் ஏற்படுத்தும் பிடிப்பு, குறிப்பாக துவங்கும் நேரத்தில். இயக்குசக்கரங்களின் எடை இதற்கு சாதகமாக
அமையும்
AIRCONDITIONED CHAIR CAR - குளிர்சாதன இருக்கை
இருப்புப்பெட்டி
AIRCONDITIONED SLEEPER CAR/COACH - குளிர்சாதன படுக்கை இருப்புப்பெட்டி
ALIGNMENT – இருப்புவழி - ஒரு
தொடரூர்தி மேற்கொள்ளும் மெய்யான இருப்பாதை வழி
ALL-CLEAR SIGNAL - முழுத்தெளிவுச் சைகை
APRON - ஏற்றிடம் - இருப்புப்பெட்டிகளின் சுமைகள் ஏற்ற அல்லது இறக்க;
இருப்புப்பெட்டிகளை பழுதுபார்க்க அல்லது கழுவும் இடம்
ASHPAN - சாம்பல்பிடி - பரணி (grate) அடியில்
அமைக்கப்பட்ட சாம்பலை பிடிக்கும் தட்டு
BALANCING SPEED -
நிலைநிமிர் வேகம் - குறிப்பிட்ட
சுமை மற்றும் சரிவிற்கான (gradient) ஒரு தொடரூர்தி
உந்திப்பொறியின் பாதுகாப்பான நிலைத்த சீரியங்கு வேகம் (safe stable
cruising speed)
BANKER -
துணையுந்துப்பொறி - மலை
அல்லது சரிவான இடங்களில் பின்புறம் இணைக்கப்பட்ட உந்துபொறி; இது சரிவில் தொடரூர்தியைத் தள்ள உதவு; மேலும்
நிறுத்தியாகவும் (brake) மலையிலிருந்து இருப்புப்பெட்டிகள்
பிரிவதையும் தடுக்கும்
BERTH - அணைகரை
BOGIE - இருப்புப்பெட்டி
CATENARY -
சங்கிலியம் - மின்சார
கம்பி அமைப்பு
CHAIR CAR -
இருக்கை
இருப்புப்பெட்டி
DEAD-END SIDING -
முட்டுப் பக்கப்பாதை
- வழித்தடமாகத தொடர்ச்சியில்லாத பக்கப்ப்பாதை (siding)
DOUBLE LINE -
இரட்டை இருப்புப்பாதை
DRIVING CAB -
இயக்கிருப்புப்பெட்டி
- இழு-தள்ளு அமைப்பில் உந்துபொறி கடையிலிருந்தோ நடுவிலிருந்தோ தொரரூர்தியைத்
தள்ளும்போது ஓட்டுநர் அமைந்துள்ள முதல் இருப்புப்பெட்டி
ENGINE (LOCOMOTIVE) - உந்துபொறி
FACING POINTS -
விலகும் பிரிவகம் - ஒரு
இருப்புப்பாதையிலிருந்து ஒரு கிளைப்பாதை விலகும் இடம்
GAUNTLETED TRACK -
பின்னல்
இருப்புப்பாதை - நான்கு இருப்புகள் (rails) கொண்ட
இருப்புப்பாதை; இதில் இருப்புகள் 1, 3 ஒரு
தடமாகவும், இருப்புகள் 2, 4 மற்றொரு
தடமாகவும் அமையும்
GRATE - பரணி
HEADWAY -
இடைநேரம் - இரண்டு
தொடந்துவரும் தொடரூர்திகளுக்கிடையே உள்ள நேரம்
HOTEL POWER - இருப்பு மின்சாரம் - இருப்பூர்தி
விசிறி, விளக்கு ஆகியவற்றிற்கு செலவாகும் மின்சாரம்;
இது மின்னாக்கி, மின்கல அடுக்கு அல்லது
இருப்பூர்தி நிலையத்திலிருந்து பெறப்படுகிறது
KING LEVER -
தலைப்பு நெம்புகோல் -
தொலைவமைந்தச் சைகைகளின் ஆளியக்கத்தை செயலிழக்கச் செய்யும் நெம்புகோல்;
இது சைகைகளை தன்னியக்கச் செய்யும்
LEVEL CROSSING -
இருப்புப்பாதைக் கடவை
LOCOMOTIVE -
உந்துபொறி
MARSHALLING YARD -
பிரிப்பு முற்றம் - இருப்புப்பெட்டிகளை
வெவ்வேறு தொடர்வண்டிகளாக பிரித்து ஒன்றுகூட்டும் முற்றம்
MONSOON LOAD - பருவமழைச் சுமை -
பருவமழைக்காலத்தில் குறைக்கப்பட்ட தாங்குசுமை
PANTOGRAPH -
வரைச்சட்டம் - மின்சார
இருப்பூர்தியின் கூரை மீது அமையும் மின்சார கம்பிவடத்தை வருடும் மாழைச் சட்டம்
PHASE GAP -
கட்ட இடைவெளி - ஒரு
மின்நிலையம் பல்வேறு முனைகளில் சங்கிலியத்திற்கு (catenary) மின்சாரம் அளிக்கும் எல்லையைக் கடத்தும் போது ஏறபடும் சிறுநேர மின்
துண்டிப்பு
POINTS -
பிரிவகம் - ஒரு இருப்புப்பாதையிலிருந்து ஒரு கிளைப்பாதை விலகும்
அல்லது சேரும் இடம்
RACK -
இருப்படுக்கு - உந்துபொறி
(engine) சேர்க்கப்படாத இருப்புப்பெட்டித் தொடர்
SIDING -
பக்கப்பாதை - வழித்தடமாகத
பயனாகாத இருப்புப்பாதை
SINGLE LINE -
ஒற்றை இருப்புப்பாதை
SLEEPER (TRACK) -
படுக்கட்டை
SLEEPER CAR/COACH -
படுக்கை
இருப்புப்பெட்டி
STABLING SHED/YARD -
ஓய்வு முற்றம் - இருப்புப்பெட்டிகள்
பயணங்களுக்கு சிறு இடைவெளிக்காக நிறுத்தப்படும் முற்றம்
STANDING LOAD -
நிற்புப் பயண எடை - ஒரு
இருப்புப்பெட்டியில் நிற்கும் மற்றும் அமரும் பயணிகளின் மொத்த எண்ணிக்கை
TRAILING POINTS -
சேரும் பிரிவகம் - ஒரு
இருப்புப்பாதையிலிருந்து ஒரு கிளைப்பாதை சேரும் இடம்
VESTIBULE -
இணைப்புக்கூண்டு
YARD -
முற்றம்