WATER
BODIES - நீர் நிலைகள்
Abnormal
well - கூவம், - ஒரு ஒழுங்கில்
அமையாத கிணறு.
Artesian
fountain - குமிழி ஊற்று, -அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று.
Bathing tank
- குளம், - ஊர் அருகே உள்ள
மக்கள் குளிக்கப் பயன்படும் நீர்நிலை.
Beautifully
Constructed Bathing Tank - தடம், -
அழகாக நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்.
Borewell -
ஆள்குழாய் கினறு
Bigger tank
with center Mantapam - நீராவி, - மைய மண்டபத்துடன்
கூடிய பெருங்குளம். ஆவி என்றும் கூறப்படும்.
Brook - ஓடை, -
அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் – எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.
Built-in
–well -
கட்டுங்கிணக் கிணறு, - சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு.
Channel - கால், - நீரோடும் வழி.
Deep
place in a river -
மடு, - ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.
Dig well - தொடு கிணறு, - ஆற்றில் அவ்வப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்.
Drinking
water tank - ஊருணி, - மக்கள் பருகும்
நீர் நிலை.
fountain -
குமிழி ஊற்று
Hollow -
கூவல் , - ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.
Irrigation
Tank -
ஏரி, - வேளாண்மை பாசன நீர் தேக்கம்.
Irrigation
Tank -
கண்மாய் (கம்மாய்), - பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.
Irrigation
tank -தாங்கல் , - இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்.
Lake -பொய்கை, - தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை.
Large Pond -
குட்டம், - பெருங் குட்டை.
Large Well -
கேணி, - அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங்கிணறு.
Large well
with steps on one side - நடை கேணி, - இறங்கிச் செல்லும்
படிக்கட்டமைந்த பெருங்கிணறு.
Moat -
அகழி, - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.
Mountain
Pool -
சுனை, - மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை.
Ocean - பெருங்கடல், சமுத்திரம்
Pool - குண்டு, -
குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.
Reservoir - சிறை, - தேக்கப்பட்ட பெரிய
நீர் நிலை.
Reservoir
for drinking and other purposes - இலஞ்சி, - பல வகைக்கும்
பயன்படும் நீர் தேக்கம்.
Ring Well - உறை கிணறு, - மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.
River -
ஆறு, - பெருகி ஓடும் நதி.
Rock cut
Well -
குமிழி, - நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு.
Round tank -
வலயம், - வட்டமாய் அமைந்த குளம்.
Sea -
கடல், - சமுத்திரம்.
Sluice with
many
Venturis - கலிங்கு,ஏரிமுதலியபாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்டு பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.
Venturis - கலிங்கு,ஏரிமுதலியபாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்டு பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.
Sluice with
many venturis -
மதகு, - பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ள, பல கண்ணுள்ள ஏரி
நீர் வெளிப்படும் மடை.
Small Pond -
குட்டை, - சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை.
Small Pool -குண்டம்,சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.
Small sluice
with single venture -
மடை, - ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.
Small water
course - வாய்க்கால், -
ஏரி முதலிய நீர் நிலைகள்.
Spring - ஊற்று, -
பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.
Stream -
வாளி, - ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.
Suppy
channel to a tank - கால்வாய், - ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி.
Surplus
water channel -
மறு கால், - அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.
Tank -
நீர்த்தொட்டி, வீடுகளில் நீர் தேக்கிவைக்கப்படும் ஒரு சிறு தொட்டி
Tank
Surrounding a Temple -
தளிக்குளம், - கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற நீர் நிலை.
Tank with
Duck Weed -
சேங்கை, - பாசிக்கொடி மண்டிய குளம்.
Temple tank - திருக்குளம், - கோயிலின் அருகே அமைந்த நீராடும் குளம்.
Temple tank
with inside pathway along parapet wall - தெப்பக்குளம், ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்.
Water Falls -
அருவி, - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.
Well in
middle of a tank - பிள்ளைக்கிணறு, - குளம் ஏரியின்
நடுவே அமைந்த கிணறு.
Well in
Sea-shore -
ஆழிக்கிணறு , - கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு.
Well with
bubbling spring -
பொங்கு கிணறு, - ஊற்றுக்கால் கொப்பளித்துக் கொண்டே இருக்கும் கிணறு.